யாப்பிலக்கணம்
"கை - க்கு தேவை காப்பு! செய்யுளுக்கு தேவை யாப்பு"! யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாப்பிலக்கணம் ஆறு வகைப்படும்.
1.எழுத்து
2.அசை
நேரசை
- க - தனி குறில்
- கா - தனி நெடில்
- கல் - தனிக் குறில் ஒற்று
- கால் - தனி நெடில் ஒற்று
நிரையசை
- கல - இரு குறில்
- கலா - குறில் நெடில்
- கலம் - இரு குறில் ஒற்று
- கலாம் - குறில் நெடில் ஒற்று
3.சீர்
ஓரசைச்சீர்
நேர் | நாள் |
நிரை | மலர் |
நேர் / நேர் - நேர்பு | காசு |
நிரை / நேர் - நிரைபு | பிறப்பு |
ஈரசைச்சீர்
நேர் / நேர் | தேமா |
நிரை / நேர் | புளிமா |
நேர் / நிரை | கூவிளம் |
நிரை / நிரை | கருவிளம் |
மூவசைச்சீர்
காய்ச்சீர்
நேர் / நேர் / நேர் | தேமாங்காய் |
நிரை / நேர்/ நேர் | புளிமாங்காய் |
நேர் / நிரை / நேர் | கூவிளங்காய் |
நிரை / நிரை / நேர் | கருவிளங்காய் |
கனிச்சீர்
நேர் / நேர் / நிரை | தேமாங்கனி |
நிரை / நேர் / நிரை | புளிமாங்கனி |
நேர் / நிரை / நிரை | கூவிளங்கனி |
நிரை / நிரை / நிரை | கருவிளங்கனி |
4.தளை
- நேரொன்றாசிரியத்தளை
- நிரையொன்றாசிரியத்தளை
- இயற்சீர்வெண்டளை
- வெண்சீர்வெண்டளை
- ஒன்றிய வஞ்சிதளை
- ஒன்றா வஞ்சித்தளை
- கலித்தளை
5.அடி
- குறளடி
- அளவடி
- சிந்தடி
- நெடிலடி
- கழிநெடிலடி
6.தொடை
- மோனை
- எதுகை
- இயைபு
- முரண்
- அந்தாதி
- அளபெடை
- இரட்டை
- செந்தொடை
Published by:
பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!
பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!
Post a Comment